ஜப்பான், செப்டம்பர் 17 – ஜப்பானில் குறைந்தது 100 வயதுடையவர்களின் எண்ணிக்கை 95,119ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
இது 54, ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
இவ்வருடம் செப்டம்பர் 15ஆம் திகதி வரை, 100 வயது முதியவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2,980 அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மொத்த எண்ணிக்கையில் 83,958 பேர் பெண்கள் மற்றும் 11,161 ஆண்களாவர்.
இந்நிலையில், உலகிலேயே ஆக வயதானவர் என்று 116 வயது டொமிக்கோ இட்டூக்கா (Tomiko Itooka) மூதாட்டியும், 110 வயதுடைய கியோடகா மிசுனோ (Kiyotaka Mizuno) எனும் மூதாளனும் ஜப்பானில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.