
ஸ்ரீ நகர், நவம்பர்-15,இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பெரிய வெடிப்பில், குறைந்தது 9 பேர் கோல்லப்பட்டனர்.
போலீஸ்காரர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களும் அவர்களில் அடங்குவர்.
மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்; போலீஸ் நிலையம் முழுவதுமாக சேதமடைந்தது; அருகிலுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டன.
அண்மைய புது டெல்லி கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பரிசோதிக்கும் போது இவ்விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
எனவே இது பயங்கரவாத தாக்குதல் அல்ல, தவறுதலான வெடிப்பே என அவர்கள் உறுதிப்படுத்தினர்.
என்றபோதிலும் சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



