
ஜாசின், ஜன 27 – ஜாசின், ஜாலான் Selandar – Nyalasசில் ஒரு காரில்
மோதியபின் 41 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் 10 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் மரணம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் மணி 1.07 அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த ஆடவர் உயிரிழந்தார் என என ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent லீ ரோபர்ட்
(Lee Robert ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ( Selandar ) ரிலிருந்து நியாலாஸ் ( Nyalas ) நோக்கி தனது ஹோண்டா மோட்டார் சைக்கிளிலில் சென்றபோது எதிர் பாதையில் நுழைந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அப்போது எதிர்திசையில் இருந்து வந்த 50 வயது நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி கார் , அந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முயன்றபோது அதில் மோதியதால் மோட்டார் சைக்கிள் சாலையின் வலதுபுறம் இருந்த மின் கம்பம் மற்றும் ஒரு மரத்தில் மோதியதாக லீ ரோபர்ட் கூறினார்.



