ஈப்போ, டிச – அக்டோபர் 25ஆம் தேதி நிலச்சரிவுக்கு உள்ளானது முதல் மூடப்பட்டிருந்த ஜாலான் சிம்பாங் பூலாய்- புளு வேலி கூட்டரசு சாலையின் FT 185 பகுதி இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. 42. 70 ஆவது செக்சனில் அந்த சாலை முழுமையாக திறக்கப்பட்டதாக பேரா சாலைப் போக்குவரத்துத்துறை முகநூலில் பதிவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்தில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக கூட்டரசு சாலையின் FT 185 பகுதி இன்னமும் மூடப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் 20 ஆம்தேதி Kinta மாவட்ட பொதுப் பணித்துறை தெரிவித்திருந்தது.`