Latestமலேசியா

ஜுவாரா எப்.சி காற்பந்து மேம்பாட்டு திட்டம் – இளம் விளையாட்டாளர்களுக்கு ஸ்பெய்னில் பயிற்சி வாய்ப்பு

கோலாலம்பூர், பிப் 3 – காற்பந்து விளையாட்டில் திறன்களை
மேம்படுத்திக் கொள்ள விரும்பும் இளம் விளையாட்டாளர்களுக்கான வாய்ப்பை சிரம்பானில் ஜூவாரா எப்.சி காற்பந்து கிளப் வழங்குகிறது.

இளம் விளையாட்டாளர்களிடையே இருந்துவரும்
திறன் மற்றும் ஆற்றலை கண்டறியும் இத்திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் ஸ்பெய்னில் இரண்டு மாத காலத்திற்கு நடைபெறும் பயிற்சிக்கு தேர்வு பெறும் வாய்ப்பு இருப்பதாக தெனாகா ஜூவாரா காற்பந்து கிளப்பின் பயிற்சியாளர் டி.சிவகுரு தெரிவித்தார்.

பிப்ரவரி 7,8, மற்றும் 9 ஆம்தேதிகளில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கும்படி
17 ,16 மற்றும் 14 வயதுக்குட்பட்ட இளம் காற்பந்து விளையாட்டாளர்கள் அழைக்கப்படுகின்றனர், இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு விளையாட்டளரும் 70 அமெரிக்க டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும் .

இந்த பயிற்சிக்கு பிறகு ஒவ்வொரு விளையாட்டாளருக்கும் திறன் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த முடிவுகளைக் கொண்ட மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றவர்கள்களைக் கொண்டு 17,16 மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு மூன்று குழுவினர் தேர்வு செய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் அனைத்துலக காற்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும்.

அப்போட்டியில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தும் ஆட்டக்கார்கள் ஸ்பெய்னின் LEVENTE கிளப்புடன் இரண்டு மாத காலம் பயற்சியை மேற்கொள்வதற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

ஸ்பெய்ன் பயணத்திற்காக விமான செலவுக்கான கட்டணத்தை மட்டும் விளையாட்டாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளையில்
விளையாட்டாளர்கள் தங்கியிருக்கும் வசதி மற்றும் உணவு போன்ற செலவுகளை ஸ்பெய்ன் கிளப் ஏற்றுக்கொள்ளும் என சிவகுரு தெரிவித்தார்.

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு 016 – 3736549 என்ற எண்களில் சிவகுரு அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!