Latestமலேசியா

ஜெடாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட மலாய் நடிகை நடியா கெசுமா மாரடைப்பால் மரணம்

கோலாலம்பூர், ஜனவரி-18-சவூதி அரேபியா, ஜெடாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட
மலாய் நடிகை நடியா கெசுமா (Nadia Kesuma), ஜனவரி 15-ஆம் தேதியே அங்கு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அவரின் கணவரும் USM விரிவுரையாளருமான Dr Muhammad Kamarul Kabilan Abdullah, ஃபேஸ்புக் வாயிலாக அத்தகவலை உறுதிப்படுத்தினார்.

ஜெடா அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்டு உள்ளூர் நேரப்படி காலை 8.05 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

ஆனால், சென்றவருக்கு அங்கு என்ன ஆனது என்ற தகவல் தெரியாமல் இங்குள்ள குடும்ப உறுப்பினர்கள் பரிதவித்தனர்.

வாட்சப்பில் பதில் இல்லை, லண்டனுக்கான அடுத்த விமானத்தில் ஏறவில்லை, பயணப் பெட்டிகள் கோரப்படவில்லை என மர்மங்கள் நீடித்தன.

வெளியுறவு அமைச்சும் சவூதி அதிகாரத் தரப்புடன் தொடர்பில் இருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் சம்பந்தப்பட்ட பயண நிறுவனம் குடும்பத்தைத் தொடர்புக் கொண்டு 50 வயது நடியாவின் மரணத்தை உறுதிச் செய்துள்ளது.

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடியா நடித்த ‘Syaitan Munafik’ மற்றும் ‘Kudeta’ போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!