Latestமலேசியா

ஜெட் எரிபொருள் விலை உயர்வு; விமான டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச்-11-ஈரான்-அமெரிக்கா சண்டையால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஜெட் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

முன்பு ஒரு பீப்பாயின் விலை சுமார் 85–90 டாலராக இருந்த நிலையில், அண்மைய நாட்களில் அது 100 டாலரைத் தாண்டியுள்ளது.

விமான நிறுவனங்களின் மொத்தச் செலவில் 20 முதல் 30 விழுக்காடு எரிபொருளுக்கு ஆகும் செலவாகும்.

இதனால் செலவினம் அதிகரித்து விமான நிறுவனங்கள் தற்போது டிக்கெட் விலையையும், எரிபொருளுக்கான உபரி கட்டணத்தையும் உயர்த்தத் தொடங்கியுள்ளன.

அவ்வகையில் மலேசியாவில் Batik Air, Firefly போன்ற விமான நிறுவனங்கள் இன்று மார்ச் 11 முதல் எரிபொருள் உபரிகட்டணத்தை உயர்த்துகின்றன.

Malaysian Airlines நிறுவனமும் 2 கட்டங்களில் இந்த எரிபொருள் உபரி கட்டணத்தை மறுசீரமைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆசியா மற்றும் பன்னாட்டு விமான நிறுவனங்களும் இதே நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

எண்ணெய் விலையேற்றச் சுமையை விமான நிறுவனங்கள் பயணிகள் மீது திணிக்க முற்பட்டால், விமான டிக்கெட் விலைகள் மேலும் உயரக் கூடும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!