
ஜோகூர் பாரு, பிப் 3 – ஜோகூர் தெப்ராவ் (Tebrau) தனியார் மருத்துவமனைக்கு அருகே தனது மனைவியின் Toyota Vios காரை ஆடவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்தற்கு குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
90,000 ரிங்கிட் இழப்புக்கு உள்ளான அந்த பெண்ணின் காருக்கு அவரது கணவரே துரோக செயலை புரிந்ததாக தென் ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவ்ப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார்.
21 வயதுடைய தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் திருப்தி அடையாமல் அப்பெண்ணின் காருக்கும் அவரது கணவர் தீவைத்துள்ளார்.
இரவு மணி 10.20 அளவில் நடந்த அந்த சம்பவம் குறித்த காணொணி CCTV ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
Toyota Velfire வாகனத்தில் வந்த அந்த சந்தேகப் பேர்வழி இதர இரண்டு பெண்கள் மற்றும் ஆடவர் ஒருவருடன் தனது மனைவி ஏறிவந்த காரை தடுத்து நிறுத்தி அதற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து Toyota Vellfire வாகனத்தில் தப்பியோடினார் என இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் Raub Selamat தெரிவித்தார்.
தனது கார் 80 விழுக்காடு தீக்கிரையானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பெண் Majidee போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் 435ஆவது விதியின் கீழ் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு தலைமறைவான அந்த ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.