
கோலாலம்பூர், அக் 22 – இனப்பாகுபாடு இன்றி ஏழ்மையில் உள்ள அனைவருக்கும் உதவுவதற்கு அரசாங்கத்தின் திட்டங்கள் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார். மலாய்க்காரர்களுக்கு மட்டுமே உதவி வழங்கப்படுவதாக கூறுவது தவறாகும். ஏழ்மையில் போராடும் எந்தவொரு குடிமக்களுக்கும் உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அன்வார் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
ஏழ்மையில் வாழ்பவர்களில் அதிக எண்ணிக்கையில் மலாய்க்காரர்கள் இருந்தாலும் இந்தியர்களும் குறிப்பாக கிள்ளான் பள்ளளத்தாக்கில் கணிசமானோர் ஏழ்மையில் இருக்கின்றனர் . எனவே மலாய்க்காரர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தின் உதவிகள் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையல்ல என அன்வார் கூறினார். மோசமான ஏழ்மையில் உள்ளவர்களின் பிரிவில் யார் இருந்தாலும் அவர்கள் மலேசிய குடிமக்களாக இருந்தால் எந்தவொரு பாகுபாடும் இன்றி கண்டிப்பாக உதவி வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.