Latestமலேசியா

ஜோகூரில், ‘Private Party’ சோதனையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருளுடன் பிடிபட்ட தாய்லாந்து பெண்‌ உட்பட 4 ஆண்கள்

ஜோகூர், நவம்பர் 22 – தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை நடத்திய அதிரடி ‘Private Party’ சோதனையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

ekstasi, syabu மற்றும் ketamin வகை போதைப் பொருளுடன் தாய்லாந்து பெண் உட்பட நான்கு ஆண்கள் பிடிபட்டதாக தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் 17 வயது முதல் 32 வயதிற்குட்பட்ட அந்த நபர்கள், அக்குடியிருப்பில் உல்லாசமாக இருப்பதற்காகப் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4,550 ரிங்கிட், பல வெளிநாட்டு நாணயங்கள், நான்கு தங்கச் சங்கிலிகள் மற்றும் ஒரு Toyota Vios வாகனமும் இந்தச் சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட ஐவரும், ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!