
ஜோகூர் பாரு, பிப்ரவரி-18 – ஜோகூரின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகளில், 130 வெளிநாட்டவர்களும், 2 உள்ளூர் முதலாளிகளும் கைதுச் செய்யப்பட்டனர்.
ஆக அதிகமாக ஜோகூர் பாருவில் 90 பேர் கைதாகினர்.
தொழிற்சாலைகள், வேலையிடங்கள் மற்றும் ஊழியர்களின் தங்குமிடங்களைக் குறி வைத்து அச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஜோகூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் டத்தோ மொஹமட் ருஸ்டி மொஹமட் டாருஸ் கூறினார்.
பத்து பஹாட், மூவார், செகாமாட் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைதானவர்கள் வங்காளதேசம், மியன்மார், பாகிஸ்தான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குடிநுழைவுத் தொடர்பான பல்வேறு சட்ட மீறல்களுக்காக கைதான வெளிநாட்டவர்கள் அனைவரும், மேல் விசாரணைக்காக பெக்கான் நெனாஸ் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் அல்லது பாதுகாக்கும் வணிக உரிமையாளர்களுக்கு கரிசனம் காட்டப்படாது என்றும் டத்தோ ருஸ்டி எச்சரித்தார்.