ஜோகூர் பாரு, செப்டம்பர்-10 ஜோகூர் பாருவில் இரசாயண துர்நாற்றம் வீசிய சம்பவங்கள் தொடர்பில் இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
23 மற்றும் 28 வயதிலான சந்தேக நபர்கள் நேற்றிரவு அடுக்குமாடி வளாகத்தில் கைதானதை, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் உறுதிபடுத்தினார்.
இருவருக்கும் பழையக் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை; போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் உறுதிச்செயப்பட்டது.
விசாரணைகளுக்கான செப்டம்பர் 16 வரை 7 நாட்களுக்கு இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
5 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 430-வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
பல மக்கள் வீடமைப்புத் திட்டங்களைப் பாதித்த அந்த இரசாயண துர்நாற்றத்திற்குக் காரணமாகவர்களை விரைந்து அடையாளம் காணுமாறு, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் கா’சி (Onn Hafiz Ghazi) முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.