ஜோகூர் பாரு, டிசம்பர்-5 – ஜோகூர் பாரு, லார்கின் பெர்டானாவில் தனது மாமாவுடன் சாலையைக் கடந்த சிறுமி கார் மோதி காயமடைந்தாள்.
நேற்றிரவு 8 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தோள்பட்டையிலும் முகத்திலும் காயமடைந்த 6 வயது அச்சிறுமி சுல்தானா அமீனா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டாள்.
சிறுமியை மோதியக் கார் நிற்காமல் சென்று விட்டது.
இந்நிலையில் அந்த காரோட்டியை போலீஸ் தேடி வருகிறது.
பாதசாரி கவனக்குறைவாக சாலையைக் கடந்த கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் (ACP Raub Selamat) கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், தென் ஜோகூர் பாரு மாவட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.