
ஜோகூர் பாரு, மார்ச்-23 – ஜோகூர் பாருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் இப்ராஹிம் நேற்று நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் நன்கொடைகளையும் வழங்கினார்.
தாமான் தம்போய் இண்டாவுக்கு வருகைப் புரிந்த TMJ, அங்குள்ள மசூதியில் வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுடனும் அளவளாவினார்.
அவரது உத்தரவின் படி, மக்களுக்கு உதவிகள் வழங்கிடவும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடவும் Southern Volunters தன்னார்வலர்கள் குழு அங்குக் களமிறக்கப்பட்டுள்ளது.
ஜோகூரில் அண்மைய வெள்ளத்தில் ஜோகூர் பாரு உள்ளிட்ட 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பித்தக்கது.
இன்று காலை வரைக்குமான நிலவரப்படி ஜோகூரில் 4,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிக வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.