கலிபோர்னியா வரலாற்றில் மோசமான காட்டுத் தீ -அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன் , ஜன 10 – லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ கலிபோர்னியா வரலாற்றில் மிகவும் மோசமானதாக வருணிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தை மீண்டும் மறுநிர்மாணிக்க உதவுவதற்கு பெரிய அளவில் நிதியும் கூட்டரசின் வளங்களும் தேவைப்படுவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். கலிபோர்னியா வரலாற்றில் ஏற்பட்ட இந்த காட்டுத் பரவலான இடங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளி மாளிகையின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அவர் கூறினார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பவர்கள் ஒரு கனவில் வாழ்கிறார்கள், தீயை அணைக்கும் வீரர்களை ஹீரோக்கள் என்று போற்றுகிறார்கள் என அவர் கூறினார்.
இந்த தீ விபத்தில் இதுவரை குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்த வேளையில் காட்டுத் தீக்கு எதிரான அமெரிக்காவின் செயல் திட்டங்களையும் அவர் ஒருங்கிணைத்தார். அதோடு வியாழன் அன்று திட்டமிடப்பட்டிருந்த ரோம் பயணத்தையும் ரத்துச் செய்த ஜோ பைடைன் , கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி கவர்னர் கவின் நியூசோமின் ( Gavin Newsom ) வேண்டுகோளின்படி, முதல் 180 நாட்களுக்கு பேரழிவைச் சமாளிப்பதற்கான செலவில் 100 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கும் என்றார். அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் 400 தீயணைப்பு வீரர்கள், 30 தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் லாஸ் ஏஸ்சல்ஸிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 பெரிய விமானங்களையும், தீயினால் ஏற்பட்ட அழிவுகளை சுத்தப்படுத்தவும் 500 ஊழியர்களை அனுப்பிவைக்கவிருப்பதாக அமெரிக்கா தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பேரிடர் பெரிய அழிவு என துணையதிபர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.