
ஜோகூர் பாரு, நவம்பர் 22-வரும் ஜனவரி 1 முதல் ஜோகூரில் ஹோட்டல்களில் தங்குவதற்கு RM3 வரி விதிக்கப்படும்.
சுற்றுலா துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இப்புதிய “ஹோட்டல் வரி” 2025 ஹோட்டல் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுகிறது.
அவ்வரியிலிருந்து பெறப்படும் தொகை, பொதுச் சேவைகள், சுற்றுலா வசதிகள் மற்றும் மாநிலத்தின் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என, ஆட்சிக் குழு உறுப்பினர் Jafni Shukor கூறினார்.
அதே நேரத்தில், உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் ஹோட்டல்களை மூடுவதற்கும், பாதுகாப்பு விதிகளை மீறும் இடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மலாக்கா, பஹாங், சிலாங்கூர், பேராக், பினாங்கு போன்ற பிற மாநிலங்களும் பல்வேறு பெயர்களில் இதேபோன்ற சுற்றுலா கட்டணங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



