
வாஷிங்டன், மார்ச் 10 – சீனாவுக்கு சொந்தமான சமூக வலைத்தலமான TikToK விற்பனை தொடர்பாக நான்கு வெவ்வேறு தரப்புக்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாகவும் இந்த ஆலோசனைகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
ஜனவரி 19 முதல் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டோக்கின் உரிமையாளரான பைட் டான்ஸ் ( ByteDance ) அதை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து டிக்டோக்கின் தலைவிதி கேள்விக்குறியாகியுள்ளது.
ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்ற பிறகு டிரம்ப், சட்டத்தை அமல்படுத்துவதை 75 நாட்கள் தாமதப்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
டிக்டோக்கில் விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப் போகிறதா என்று கேட்டதற்கு, அது சாத்தியமாகலாம் என்றார்.
எனினும் வழக்கமான வணிக நேரத்திற்கு வெளியே Reuters-ரின் கோரிகைகளுக்கு TikTok மற்றும் ByteDance உடனடியாக பதிலளிக்கவில்லை.
TikTok இல் ஏற்பட்ட குழப்பம், முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் ( Los Angeles Dodgers )உரிமையாளர் ( Frank McCourt ) உட்பட பல சாத்தியமான கொள்முதலாளர்களை ஈர்த்துள்ளது.
அவர்கள் வேகமாக வளர்ந்து வரும் வணிக ஆய்வாளர்களின் மதிப்பீட்டில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மதிப்பு 50 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.