டிசம்பர் 30 முதல் சிங்கப்பூரில் மோசடி குற்றவாளிகளுக்கு பிரம்படி தண்டனை

சிங்கப்பூர், டிசம்பர் 29 – சிங்கப்பூரில் மோசடி தொடர்பான குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு, இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் பிரம்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
scam mules எனப்படும் மோசடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சமாக 12 பிரம்படிகளும் மோசடிக்காரர்கள் மற்றும் குற்றச் கும்பலைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு 6 முதல் 24 பிரம்படிகள் வரையிலும் தண்டனை விதிக்கப்படுமென்றும் அறியப்படுகின்றது.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சு, மோசடிகளைக் கட்டுப்படுத்துவதைத் தேசிய முன்னுரிமையாக குறிப்பிடுகிறது. நாட்டில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் நிதி இழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்களை, குறிப்பாக Singpass, வங்கி கணக்குகள், கட்டண கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளை யாருடனும் பகிரக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.



