வாஷிங்டன், நவ 13- அமெரிக்காவில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட டோனல்ட் டிரம்பின் ( Donald Trump ) மகள் என கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் பெண்ணின் பழைய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ 2018ஆம் ஆண்டு டிசம்பரில் முதலில் பகிரப்பட்டபோது அதிகம் கவனிக்கப்படாமல் போனாலும், ட்ரம்பின் அண்மைய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவில், உருது மொழியில் பேசும் பெண், தன்னை பஞ்சாபி முஸ்லீம் பாரம்பரியத்தைக் கொண்டவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
பின்னர், அந்தப் பெண், அமெரிக்காவில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை விவரிப்பதோடு, மெலனியா டிரம்ப்பால் தான் தவறாக நடத்தப்பட்டதாகவும் அதன் பின் தனது தாயார் தன்னை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து விட்டதாக கூறுகிறார்.
இந்த காணொளி பல்வேறான கருத்துகளைப் பெற்று வருகிறது.