Latestமலேசியா

டேசா ஸ்தாப்பாக்கில் கிறிஸ்துவ சமயத்தை பரப்ப முயன்ற மூவரிடம் போலீஸ் விசாரணை

டேசா ஸ்தாப்பாக்கில் (Desa Setapak) ஒரு பேராங்காடி முன் கிறிஸ்துவ சமயத்தை பரப்ப முயன்ற  மூன்று தனிப்பட்ட நபர்களை கண்டறியும்  நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  டேசா ஸ்தாப்பாக்கிலுள்ள  பேரங்காடி  முன்  கிறிஸ்துவ சமயத்தை பரப்பும்  கையேடுகளை பகிரங்கமாக வெளிநாடுகளைச் சேர்ந்த மூவர் விநியோகித்து வந்தது தொடர்பான 54 வினாடிகளைக் கொண்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து  திங்கட்கிழமை இரவு மணி 10.19 அளவில் போலீஸ் புகாரைப் பெற்றதாக  வங்சா மாஜூ (Wangsa Maju) மாவட்ட போலீஸ் தலைவர்  துணை கமிஷனர்   முகமட் லாஸிம்  இஸ்மாயில் (Mohamad Lazim Ismail) உறுதிப்படுத்தினார். இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த  சில தனிப்பட்ட நபர்கள்  கண்டனம்  தெரிவித்ததைத்

தொர்ந்து அந்த மூன்று நபர்களும் அங்கிருந்து வெளியேறியதாக தெரிகிறது. தண்டனை சட்டத்தின்  298  A விதியின் கீழ்  இது குறித்து விசாரணை  நடத்தப்பட்டு  வருவதாக அவர்  கூறினார். விசாரணைக்கு உதவும் பொருட்டு சம்பந்தப்பட்ட மூன்று நபகர்களை  கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில்   முகமட் லாஸிம்  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!