ஜோகூர் பாரு, அக்டோபர் 1 – டோல் சாவடியைக் கடக்கத் தனது அடையாள அட்டையிலுள்ள ‘Touch n Go’ பயன்படுத்த முடியாததால், ஆடவர் ஒருவர் அதிருப்தியில், காவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகூர் பாரு, பெர்லிங் டோல் பிளாசாவில், டோலைக் கடக்க போதுமான பணம் இருந்தபோதிலும், அந்த ஆடவர் அடையாள அட்டையிலுள்ள TnG-ஐப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவியுள்ளது.
இந்நிலையில், 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், அங்குள்ள டோல் சாவடியின் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, கருத்து வேறுபாடு மூண்டு சண்டை உருவாக்கியிருக்கிறது.
இருவரும் ஒருவருக்குக் குத்திக் கொண்டதைப் பார்வையிட்ட பொதுமக்கள், உடனே சண்டையை முறியடிக்கக் களம் இறங்கியுள்ளனர்.
இதனால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் பலத்த காயங்கள் ஏதுவுமின்றி, உடலிலும் முகத்திலும் சிறு காயங்களுடன் சண்டை நிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்த காணொளி x தளத்தில் வைரலாகி வரும் நிலையில், வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.