ஈப்போ, அக் 15 – இன்று அதிகாலையில் தஞ்சோங் மாலிமிற்கு அருகே கோத்தா மாலிம் பிரிமாவில் குற்றவாளி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதை பேரா போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ் ( Azizi Mat Aris )
உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பில் மேல் விவரங்களை பெறும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். புக்கிட் அமான் போலீஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த குற்றவாளி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இது தொடர்பாக புக்கிட் அமான் அல்லது பேரா போலீஸ் அறிக்கை வெளியிடக்கூடும் என அஸிஸி நம்புவதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியின் சடலம் சவப் பரிசோதனைக்காக ஈப்போவிலுள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் ( Raja Permaisuri Bainun ) மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதனிடையே அண்மையில் தெலுக் இந்தான் , லங்காப்பில் Chuai Chak பகுதியில் போதைப் பொருள் விநியோகக் கும்பலையும் போலீசார் முறியடித்த தகவலையும் அஸிஸி வெளியிட்டார்.