Latestமலேசியா

பூச்சோங்கில் சட்டவிரோத உணவங்காடி நிலையத்தில் சோதனை; 58 வெளிநாட்டவர்கள் கைது

பூச்சோங், பிப்ரவரி-6 – சிலாங்கூர், பூச்சோங்கில் சட்டவிரோதமாக இயங்கி வரும் food court எனப்படும் உணவங்காடி நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 58 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர்.

வங்காளதேசிகள், மியன்மார், வியட்நாம் நாட்டவர்கள், இந்திய, இந்தோனீசிய பிரஜைகளும் அவர்களில் அடங்குவர்.

18 முதல் 40 வயதிலான அனைவரும் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

பொது மக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து ஒரு வாரம் கண்காணித்து, நேற்று முன்தினம் அச்சோதனையில் இறங்கியதாக, குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Datuk Zakaria Shaaban கூறினார்.

குடிநுழைவுத் துறை அதிகாரிகளோடு, தேசியப் பதிவுத் துறை மற்றும் பொதுத் தற்காப்புப் படையும் அச்சோதனையில் இறங்கியது.

தற்காலிக வேலை பெர்மிட் முடிந்த மற்றும் காலாவதியானப் பயணப் பத்திரங்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!