Latestஇந்தியாஉலகம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனிதவள மேம்பாட்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, அக்டோபர்-8,  ஆசிய மனிதவள மேம்பாட்டு விருது அமைப்பின் சார்பில், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனிதவள மேம்பாட்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் அவ்வமைப்பின் இரண்டு நாள் அனைத்துலக மாநாட்டின் ஒரு பகுதியாக, தலைமைச் செயலகத்தில் வைத்து ஸ்டாலினுக்கு அவ்விருது வழங்கப்பட்டது.

சமுதாய மேம்பாடு, படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்தியதற்காக, ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட்டதாக, அவ்வமைப்பின் நிறுவனரும், மலேசிய சைபர் ஜெயா பல்கலைக் கழக இணை வேந்தருமான தான் ஸ்ரீ Dr. R. பாலன் ( Tan Sri Dr. R. Palan) தெரிவித்தார்.

தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, லட்சக்கணக்கானோருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழக இளைஞர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது.

கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டினால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என விருதுக் குழு உறுதியாக நம்புவதால், தமிழகத்தில் அப்பணியை செவ்வனே செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் அவ்விருதுக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பதாக, தான் ஸ்ரீ பாலன் சொன்னார்.

பிரசித்திப் பெற்ற அவ்விருது இதற்கு முன் பிலிப்பின்ஸ் அதிபர் ஃபிடெல் ராமோஸ் (Fidel Ramos), போஸ்னியா பிரதமர் ஹாரிஸ் சிலாய்ஜிச் (Haris Silajdzic) சரவாக் மாநில முன்னாள் முதல்வரும் ஆளுநருமான தான் ஸ்ரீ அப்துல் தாயிப் மஹ்முட் (Tan Sri Abdul Taib Mahmud) போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!