
கோலாலம்பூர், செப் 9 – ரவுப், Kuala Atokகில் Lingkaran Timur Utama நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பகுதியில் ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி மரணம் அடைந்தார்.
37 வயதுடைய முகமட் ஷஹிங்கர் ( Md Shahangir ) என்ற வங்காளதேச ஆடவர் இடது காலில் கடுமையாக காயத்திற்கு உள்ளாகி பெந்தா (Benta ) சுகாதார கிளினிக்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு இறந்தார் என மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாக ரவுப் போலீஸ் தலைவர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் வசித்துவந்த ஷஹிங்கர் தனது சகோதரரை சந்திப்பதற்காக அவர் வேலை செய்த இடத்திலுள்ள குடியிருப்பு பகுதிக்கு நடந்து சென்றபோது நேற்றிரவு ஏழு மணியளவில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்தது.