சியோல், டிசம்பர்-30, தென் கொரியாவின் மிகப் பெரிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான Jeju Air-ரின் மற்றொரு விமானமும், இன்று பிரச்னையைச் சந்தித்தது.
161 பயணிகளுடன் கிம்போ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து காலை 6.37 மணிக்குப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் தரையிறங்கும் கியரில் பிரச்னை கண்டறியப்பட்டது.
விமான நிறுவன பராமரிப்பு மையத்துடனான தொடர்பிலேயே கியர் பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது;
என்றாலும், பரிசோதனைக்காக, விமான நிலையத்திற்கே திரும்ப முடிவெடுக்கப்பட்டதாக Jeju Air பேச்சாளர் சொன்னார்.
இதையடுத்து அந்நாட்டு நேரப்படி காலை 7.20 மணிக்கு அவ்விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
அதிலிருந்த பயணிகள் மாற்று விமானத்தில் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர்.
2 நாட்களில் பிரச்னையை எதிர்நோக்கியுள்ள இரண்டாவது Jeju Air விமானம் இதுவாகும்.
முன்னதாக, தென் கொரிய வரலாற்றிலேயே நிகழ்ந்த மோசமான் விமான விபத்தாக, நேற்று காலை மூவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானம் வெடித்துச் சிதறியதில், 179 பயணிகள் கொல்லப்பட்டனர்.
அதில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.