Latestமலேசியா

தாமரை பூஜை மேடைகள் நிறுவனத்தின் இரண்டாவது கிளை இடமாற்றம்; திறப்பு விழாவுக்கு நடிகர் விமல் சிறப்பு வருகை

தம்போய், மார்ச்-29-தாமரை பூஜை மேடைகள் நிறுவனமான Lotus Luxury Altars-சின் இரண்டாவது கிளை, புதிய இடத்திற்கு மாறியுள்ளது.

ஜோகூர் பாரு, தாமான் தம்போய் இண்டாவில் 2 மாடி கட்டடமாக நேற்று அது பிரமாண்ட திறப்பு விழா கண்டது.

சென்னையிலிருந்து பிரபல நடிகர் விமல் சிறப்பு விருந்தினராக அதில் பங்கேற்றார்.

உருமி மேளம், சிங்க நடனம் என அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்பிருந்தது தரைத் தளம் மட்டுமே என்பதால், இடவசதி பிரச்னையாக இருந்ததாக, Lotus Luxury Altars நிறுவனர் சுரேஷ் குமார் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

தெய்வீகத்தையும் கைவினைத் திறனையும் ஒருங்கே அமைக்கும் வகையில் இந்த கண்காட்சி அறை வடிவமைக்கப்பட்டு, பாரம்பரியம் மற்றும் நவீன அழகமைப்புடன் கூடிய சாமி மேடைகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த திறப்பு விழாவை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விலைக் கழிவுச் சலுகையும் வழங்கப்படுகிறது.

முதல் கிளை ஜோகூர் லார்கினிலும், மூன்றாவது கிளை கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸிலும், நான்காவது கிளை நெகிரி செம்பிலான் சிரம்பானிலும் இருக்கும் நிலையில், விரைவில் ஐந்தாவது கிளையைத் திறக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

இவ்வேளையில் நடிகர் விமல், இரசிகர்களுடன் சந்திப்பு நடத்தி அளவளாவினார்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் சுற்று வட்டார மக்களும் இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

புதிய இடத்தில் தொடங்கியுள்ள இந்த கண்காட்சி அறை, பாரம்பரியத்தையும் செழுமையையும் இணைக்கும் தனித்துவ முயற்சி என வாடிக்கையாளர்கள் பாராட்டினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!