Latestஉலகம்

You Tube பக்கங்களுக்குத் தடை; கூகள் நிறுவனத்துக்கு 2.0 டெசிலியன் டாலர் அபராதம் விதித்த ரஷ்யா

மோஸ்கோ, நவம்பர்-1, ரஷ்ய அரசாங்கத்துக்கு ஆதரவான You Tube பக்கங்களை அகற்றியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு அந்நாட்டரசு 2.0 டெசில்லியன் அல்லது 2.0 ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

எண் வடிவில் அந்த முழுத் தொகையை எழுதினால் 2-க்குப் பிறகு 36 இலக்க எண் வருமளவுக்கு, அது கற்பனைக்கே எட்டாத பெரியத் தொகையாகும்.

இன்னும் சொல்லப் போனால், உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே வெறும் 110 ட்ரில்லியன் டாலர் மட்டுமே.

9 மாதங்களுக்குள் கூகுள் அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அதன் பின் ஒவ்வொரு நாளும் அத்தொகை இரட்டிப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தும் வரை ரஷ்யாவுக்குள் கூகுள் பயன்பாடு தடைச் செய்யப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

நடந்துகொண்டிருக்கும் இந்தச் சட்டப்பூர்வ விவகாரங்கள் மோசமான விளைவுகளை
ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்பவில்லை என, கூகுள் தனது பதிலைச் சுருக்கமாகக் கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!