புத்ராஜெயா, நவம்பர்-19, மாணவர்கள் தாய்லாந்திலிருந்து தினமும் சுங்கை கோலோக் ஆற்றை கடந்து வந்து மலேசியப் பள்ளிகளில் கல்விக் கற்பதாகக் கூறப்படுவதை, கல்வி அமைச்சு கடுமையாகக் கருதுகிறது.
அது குறித்து முழுமையாக விசாரிக்கப்படுமென, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் ( Fadhlina Sidek) தெரிவித்தார்.
அம்மாணவர்கள் மலேசியர்களாக இருந்தால், அச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருப்பதால், விரிவான விசாரணை அவசியமென அமைச்சர் சொன்னார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 500 பள்ளி மாணவர்கள், சட்டவிரோதத் தளங்களைப் பயன்படுத்தி சுங்கை கோலோக் ஆற்றை கடந்து வந்து மலேசியாவில் கல்விக் கற்பதாக படங்களுடன் முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.