
கோவை, ஜூன்-8 – தமிழகத்தின் கோவையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷினே தோம் சாக்கோ காயமடைந்தார்.
அவரின் 70 வயது தந்தை C.P. சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊரான கேரளாவின் திரிசூரிலிந்து கர்நாடகாவின் பெங்களூருக்கு அவர்களின் குடும்பம் சென்ற MPV வாகனம், டிரக் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் 41 வயது ஷினே தோம் சாக்கோவுக்கு இடது கைமுறிவு ஏற்பட்டது.
அவரின் தாயார் மற்றும் இளைய சகோதரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன.
நடிகரின் மேலாளர் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் கூறியது.
மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுகின்றன.