Latestமலேசியா

திருமண குதூகலத்தை மக்களுடன் பகிர்ந்துகொண்ட சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமிர் ஷா தம்பதியர்

ஷா ஆலாம், நவம்பர்-8 – புதுமணத் தம்பதியரான சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமிர் ஷா சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா – டத்தின் படுக்கா ஸ்ரீ அஃப்சா ஃபாடினி அப்துல் அசிஸ் இருவரும், அரச திருமண வைபவ குதூகலத்தை நேற்று மாநில மக்களுடன் கொண்டாடினர்.

ஷா ஆலாம் சுதந்திர சதுக்கத்தில், அந்த இளம் அரசத் தம்பதியரை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் அரசாங்கச் செயலாளர் டத்தோ Dr Ahmad Fadzil Ahmad Tajuddin உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சுமார் 12,000 பேர் பங்கேற்ற அவ்விழாவில், அண்மையில் நடந்ததேறிய அரசத் திருமணத்தின் வீடியோ பதிவு முதன் முறையாக பெரியத் திரையில் ஒளிபரப்பபப்பட்டது.

பின்னர் திருமண கேக்கும் பாரம்பரிய pulut kuning பதார்த்தமும் வெட்டப்பட்டன.

கலைஞர்களின் இசைப் படைப்புகள், வண்ணமய aurora லேசர் ஒளியூட்டு மற்றும் கண்கவர் வானவேடிக்கைகளை கண்டுகளித்து விட்டு அரசத் தம்பதியர் விடைப்பெற்றுச் சென்றனர்.

தெங்கு அமிர் ஷா – அஃப்சா ஃபாடினி இருவரின் அரசத் திருமணம் அக்டோபர் 2-ஆம் தேதி கிள்ளான், அலாம் ஷா அரண்மனையில் உள்ள அரச மசூதியில் நடைபெற்றது.

அக்டோபர் 22-ஆம் தேதி அதே அலாம் ஷா அரண்மனையின் பாலாய்ரூங் ஸ்ரீ அரச மண்டபத்தில், சடங்குப்பூர்வ திருமண வரவேற்பு நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!