Latestமலேசியா

திருமதிகளுக்கான உலக அழகிப் போட்டியில் 2 முக்கிய விருதுகளைக் குவித்த மலேசியாவின் Dr ஷாலினி தேவி

லாஸ் வெகாஸ், பிப்ரவரி-3 – அமெரிக்கா, லாஸ் வெகாசில் நடைபெற்ற திருமதிகளுக்கான Mrs World 2024 உலக அழகிப் போட்டியில், மலேசியாவின் Dr ஷாலினி தேவி ராமசந்திரன் 2 முக்கிய விருதுகளை வென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

Mrs Malaysia-வாக அப்போட்டியில் பங்கேற்ற Dr ஷாலினி தேவி, சிறந்த ஆடைக்கான விருதையும் (Best Costume Award), சிறந்த தூதருக்கான Mrs World Ambassador விருதையும் வென்றார்.

Puteri Membara Malaysia என்ற பெயரில் தனித்துவமான தேசியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடையை அணிந்து, நீதிபதிகளின் மனதை அவர் கவர்ந்தார்.

தேசிய ஆடைகளில் இதுவரை வடிவமைக்கப்பட்டதிலேயே மிகவும் நீளமானதாக 105 மீட்டருக்கு அவரின் ஆடையின் வால் பகுதி (trail) அமைந்திருந்தது.

மலேசியச் சாதனைப் புத்தகத்திலும் அது இடம் பிடித்துள்ளது.

சரவாக்கைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் Saran Anak Lagong கைவண்ணத்தில், மலேசியப் பெண்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றும் வகையிலும், மலேசியப் பாரம்பரியக் கலாச்சாரத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அது வடிவமைக்கப்பட்டிருந்தது.

உலக அரங்கில் அம்முக்கிய விருதுகளை வென்று அசத்திய Dr ஷாலினியை, Mrs Malaysia World Sdn Bhd-டின் தேசிய இயக்குநர் டத்தின் ஹர்வீன் கவுர் பாராட்டினார்.

சிலாங்கூரைச் சேர்ந்த 37 வயது மருத்துவரான Dr ஷாலினி தேவி, தனது கணவர் Dr யுவனேஷ்வரன் மூர்த்தியுடன் இணைந்து கிளினிக்கை நடத்தி வருகிறார்.

இந்த 2024 Mrs World அழகிப் போட்டியில் ஆப்ரிக்க போட்டியாளர் வாகை சூடிய வேளை, இலங்கை மற்றும் தாய்லாந்து போட்டியாளர்கள் இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.

1984-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இப்போட்டி, திருமணமான பெண்களுக்காக உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் அழகிப் போட்டியாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!