
புது டெல்லி, ஜனவரி-17 – ஜனவரி 16 – திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் சிறப்பு காணொளி வெளியிட்டுள்ளார்.
அதில், தலைமுறை கடந்த மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவர் என அவர் மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர், நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த சமூகத்தை கனவு கண்டவர் என மோடி சொன்னார்.
தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்…
எனவே, திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடியின் இச்செய்தி, திருவள்ளுவரின் போதனைகள் மற்றும் சிறப்புகள் இன்றைய சமூகத்திலும் எவ்வளவு பொருத்தமானவை என்பதை பறைசாற்றுகிறது.



