
இஸ்துன்புல் , டிச 24 – துருக்கியேயின் ( Turkiye) மத்திய விவசாயப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்துடன் ,நிலத்தடி நீர் குறைந்து வருவதால் நூற்றுக்கணக்கான புதை குழிகள் தோன்றியுள்ளன. இது விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு துருக்கியில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் கவலைக்குரிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. கோன்யா ( Konya ) மாநிலத்தில் கரபினார் (karapinar) பகுதியில் உள்ள சோளம், கோதுமை மற்றும் பீட்ரூட் பயிரிடும் பகுதிகளில் இப்போது பெரிய புதை குழிகள் காணப்படுகின்றன.
மலைப்பகுதிகளில், முன்பு தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய, பழங்கால புதைகுழிகள் இப்போது பெரும்பாலும் வறண்டுவிட்டன. சில பகுதிகளில், ஒரு பண்ணைப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட
புதை குழிகள் காணப்பட்டன. கோன்யா படுகையில் புதைகுழிகள் உருவாகும் விகிதம் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது, மொத்த எண்ணிக்கை இப்போது 700 ஐ நெருங்குகிறது என கோன்யா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவியில் பேராசிரியர் பெதுல்லா அரிக் ( Fetullah Arik ) கூறினார். இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம், 2,000 ஆண்டுகளில் இருந்து உலகம் முழுவதையும் பாதித்துள்ள பருவநிலை மாற்றம் மற்றும் வறட்சிகள் ஆகும். இந்த வறட்சியின் விளைவாக, நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.



