ஜோர்ஜ் டவுன், ஜன 7 – தென்கிழக்காசியாவில் பார்க்க வேண்டிய ஏழு சிறந்த இடங்களில் பினாங்கும் ஒன்று என உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இணையத் தளமான லோன்லி பிளனெட் (Lonely Planet ) பட்டியலிட்டுள்ளது. உணவு, கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியங்களில் வெளிப்படும் மலாய், சீன மற்றும் இந்தியத் தாக்கங்களைக் கொண்ட கலாச்சாரங்களின் வண்ணமயமாக பினாங்கு இருப்பதாக ஜனவரி 2ஆம்தேதி தனது இணையத் தளத்தின் மூலம் Lonely Planet தெரிவித்துள்ளது.
வெப்பமண்டல தீவு மாநிலத்தின் தலைநகரான ஜோர்ஜ் டவுன் (George town) , அதன் பாரம்பரியத்தை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய ஒன்றாக மாற்ற முடிந்ததுடன் அதன் நம்பகத்தன்மையை இன்னும் பராமரிக்கிறது. ஒரு நகரத்தில் சீன பாரம்பரிய வீடுகள், பள்ளிவாசல்கள் , இந்து கோவில்கள் மற்றும் பிரிட்டிஷ் (British) காலனித்துவ கட்டிடங்களை நீங்கள் பார்வையிடலாம் என அந்த சுற்றுலா இணைய பதிவேடு தெரிவித்துள்ளது.