சென்னை, நவம்பர்-17 – தெலுங்கு மக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி தலைமறைவான பிரபல நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் கைதாகியுள்ளார்.
தனிப்படை போலீசார் அவரைக் கைதுச் செய்து சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் 3-ம் தேதி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றில் பங்கேற்ற கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசி பெரும் கண்டனத்துக்கு ஆளானார்.
எதிர்ப்பு வலுக்கவே, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
என்றாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் போலீசில் புகார் செய்ததால், 4 சட்டப்பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது.
விசாரணைக்காக போலீசார் வீட்டுக்குச் சென்ற போது அவரைக் காணவில்லை.
முன்ஜாமீன் கோரி செய்திருந்த மனுவும் நிராகரிக்கப்பட்டதால் கஸ்தூரி தலைமறைவானார்.