Latestமலேசியா

தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறையின் ஆதரவுடன் ஐயப்பனின் மேடை நாடகம் அரங்கேற்றம் கண்டது

கோலாலம்பூர், நவம்பர் 10 – சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் (MOTAC) தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறையின் (JKKN) ஏற்பாட்டில், மீண்டும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி 2024 கோலாகலமாக நடந்தேறியது.

மலேசியாவிலுள்ள பல்வேறு இனங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கலைகளின் அழகை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், இவ்வருடம் ஐயப்பனின் மேடை நாடகமும் அரங்கேறியது.

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை குழுமத்தின் மண்ணின் மைந்தர்களால் கடந்த நவம்பர் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் படைக்கப்பட்ட இந்த கலை நிகழ்ச்சியில், 900 பேர் கலந்து கொண்டதாக சிலாங்கூர் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் கலைத் துறையின் இயக்குநர் Mohamad Raizuli தெரிவித்தார்.

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் சங்கமிக்கும் ஓர் இடமாக, 90 மணி நேரம் இரு தினங்களுக்கு இந்த மேடை நாடகம் நடைபெற்றது.

8 வயது முதல் 45 வயது வரைக்குமான மூத்த கலைஞர்கள் உட்பட இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஐயப்பனை நம்பி வழிபடுபவர்களுக்கு மத்தியில், அவரின் புகழை பாமர மக்களும் உணரும்படி, இந்த நாடகம் படைக்கப்பட்டதாக நாடகத்தின் இயக்குநரும் ஆசிரியருமான Nalini Rathakris கூறினார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படும் கடவுள், சபரிமலை என்ற திருத்தலத்தில் எழுந்தருளி அருள் புரியும் ஐயப்பனின் வரலாறு மேடை நாடகமாக அரங்கேற்றம் கண்டு, பல்வேறு தரப்பினரை ஈர்த்து அரங்கத்தை நிரப்பச் செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!