Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

தோக்யோவில் 6 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம் போன 276 கிலோ கிராம் தூனா மீன்

தோக்யோ, ஜனவரி-6, ஜப்பான், தோயோசு மீன் சந்தையில் நடைபெற்ற வருடாந்திர ஏலத்தில், Bluefin வகையைச் சேர்ந்த தூனா மீன் 6 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டுள்ளது.

276 கிலோ கிராம் எடையிலான அந்த ராட்சத மீனை, பிரபல மொத்த வியாபாரியான Yamazuki-யும், ஆடம்பர சுஷி உணவகமான Sushi Ginzo Onodera-வும் சேர்ந்தே வாங்கியுள்ளனர்.

ஏலத்தில் விடப்படும் முன், மீன்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை பரிசோதனை செய்துகொள்ள, ஏலம் எடுக்க வந்தோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

1999-லிருந்து ஏலத்தில் பதிவான இரண்டாவது மிக உயரிய விலை இதுவென ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

2019-ல் 13 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஒரு தூனா மீன் ஏலம் போனதே இதுவரை சாதனையாக இருக்கிறது.

தோக்யோவில் உள்ள இந்த தோயோசு மீன் சந்தையானது, ஜப்பானில் தூனா மீன் வர்த்தகத்திற்குப் பெரும் பெயர் பெற்றதாகும்.

அதோடு உலகம் முழுவதும் ஏராளமான கடல் உணவு விரும்பிகளின் முக்கியத் தேர்வாகவும் இது உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!