
பட்டவொர்த், மார்ச்-26-சமூக ஊடகத்தில் நபிகள் நாயகத்தை அவமதித்த புகாரில் 47 வயது ஆடவர் ஒருவர் பினாங்கு, பட்டர்வொர்த்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் Fadil Marsus அதனை உறுதிப்படுத்தினார்.
சுயேட்சை சமய சொற்பொழிவாளர் ஃபிர்டாவுஸ் வோங்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வாடவர் அவமதிப்பான கருத்துகளை பதிவிட்டதாக, மார்ச் 22-ஆம் தேதி பெறப்பட்ட போலீஸ் புகார் தொடர்பில் அக்கைது மேற்கொள்ளப்பட்டது.
அவரது கைப்பேசியை பறிமுதல் செய்ததுள்ள போலீஸார், விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைத்துள்ளனர்.
மத ஒற்றுமையை பாதிக்கும், சமூகத்தில் பகைமை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடந்துகொண்டது, இணைய வசதிகளைத் தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சேர்க்கப்பட்டுள்ளன.



