Latestஉலகம்

நமீபியா நாட்டில் கோரத்தாண்டவமாடும் பஞ்சம்; யானைகளைக் கொன்று உணவாக்க அரசாங்கம் திட்டம்

நமீபியா, செப்டம்பர் -1, ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் (Namibia) கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்குவதற்காக, யானைகள் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அவசர காலத்தின் போது நாட்டின் இயற்கை வளங்களை பொதுமக்களுக்குப் பயன்படுத்த அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.

எனவே, 83 யானைகள் உள்ளிட்ட 723 வன விலங்குகளை கொல்லும் திட்டம் மிகவும் தற்போது அவசியமென நமீபியா சுற்றுச்சூழல், காடுகள், சுற்றுலாத் துறை அமைச்சு தெளிவுப்படுத்தியது.

மக்களுக்கு உணவாகப் பயன்பட, யானைகளோடு, 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள் உள்ளிட்டவையும் கொல்லப்படவிருக்கின்றன.

நமீபியா நாட்டின் 85% உணவு வளங்கள் தீர்ந்துப் போய், ஏற்கனவே 157 வன விலங்குகள் கொல்லப்பட்டன.

அதன் மூலம் கிடைத்த 63 டன் இறைச்சியைக் கொண்டு ஓரளவுக்கு மக்களின் பசியை அந்நாட்டரசு போக்கியது.

அழிந்து வரும் வன விலங்குகள் குறிப்பாக யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், மக்களின் உணவுக்காக அவற்றைக் கொல்ல வேண்டியச் சூழல் ஏற்பட்டுள்ளதை வன விலங்கு ஆர்வலர்களும் புரிந்துகொள்ள வேண்டுமென, அந்நாட்டரசு கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!