Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடுத்த வழக்கு; நெட்பிளிக்ஸின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஜன 28 – நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

Copywrite அல்லது பதிப்புரிமை மீறியதாக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தனுஷ் முன்னதாக வழக்கு தொடுந்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம், நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், தனுஸ் நிறுவனமான ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ வாயிலாக வெளிவந்த நானும் ரௌடிதான் படப்பிடிப்பில் நயன்தாரா விக்னேஸ் சிவன் உரையாடும் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன.

அந்தப்படத்திலுள்ள சில படப்பிடிப்பு காட்சிகளும் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்பதோடு , காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த தடைவிதிக்க கோரியும் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு முன் வழக்கு தொடுத்திருந்தது.

தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய, நெட்பிளிக்ஸ் நிறுவனமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.,28) தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்தார்.

மேலும், வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கை பிப்ரவரி 5ம் தேதி ஒத்திவைக்கவும் நிதிபதி உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!