நரைமுடி புற்றுநோயைத் தற்காக்குமா? ஜப்பானிய ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

தோக்யோ, நவம்பர்-4,
முடி நரைத்தல் என்பது வெறும் வயது அடையாளம் அல்ல, மாறாக உடல் புற்றுநோயைத் தடுக்கும் இயற்கை பாதுகாப்பு செயல்முறையாக இருக்கலாம் என, ஜப்பானின் தோக்யோ பல்கலைக்கழக ஆய்வாளர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
முடிக்கு நிறம் வழங்கும் மெலனோசைட் ஸ்டெம் செல்கள் (Melanocyte Stem Cells) மிகுந்த DNA சேதம் அடைந்தால், அவை செயலிழந்த நிலையிலேயே நிலைத்திருக்கும் அல்லது நிற உற்பத்தியை நிறுத்தி நரைமுடியை உருவாக்கும்.
இந்த “சேனோ-டிஃபரன்ஷியேஷன்” (seno-differentiation) எனப்படும் செயல்முறை, செல்கள் புற்றுநோயாக மாறுவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு வழிமுறையாகும்.
ஆனால் அதற்காக இது புற்றுநோயிலிருந்து முழுமையான பாதுகாப்பை தரும் என்ற அர்த்தமில்லை என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தவிர, இது தற்போது எலிகள் மீதான ஆய்வில் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, உங்கள் முடி நரைத்தால் இனியும் கவலை வேண்டாம், அது நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் அறிகுறியாக கூட இருக்கலாம் என வலைத்தளவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.



