தோக்கியோ, நவ 11 – ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) நாடாளுமன்ற வாக்களிப்பில் இன்று வெற்றி பெற்றார். கடந்த மாதம் நடந்த கீழ்சபைத் தேர்தலில் ஊழல் களங்கத்தினால் அவரது கூட்டணி தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஷிகெரு இஷிபா தொடர்ந்து தலைவராக நீடிப்பதற்கு இன்று வாக்களித்தனர். அக்டோபர் 1 ஆம் தேதி திடீர் தேர்தலை நடத்திய பின் பிரதமராக பதவியேற்ற Shigeru நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் புதிய அதிபர் டோனல் டிரம்ப்பின் ஆதரவை மீண்டும் பெறவேண்டிய சூழ்நிலையில் பலவீனமான சிறுபான்மை அரசாங்கத்திற்கு பிரதமர் இஷியா தலைமையேற்க வேண்டிய சூழ்ந்லைக்கு உள்ளாகியுள்ளார். சீனா மற்றும் வட கொரியாவுடன் பதற்றம் அதிகரித்து வரும் இவ்வேளையில் உள்நாட்டிலும் அவருக்கு நெக்குதல் அதிகரித்து வருகிறது. Shigeru Ishiba வின் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியான கோமெய்டோ ( Komeito) தேர்தலில் மிகப்பெரிய தொகுதிகளை வென்றது. எனினும் 2012 முதல் பெரும்பான்மையை இழந்ததால் தனது கொள்கைகளை நிறைவேற்றுவதில் சிறு எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறவேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர் உள்ளாகியுள்ளார்.