கோலாலம்பூர், செப்டம்பர்-25 – அரச மலேசிய சுங்கத் துறை (JKDM), போதைப்பொருளை மோப்பம் பிடிக்கும் ஆற்றல் பெற்ற Labrador Retriever இனத்தைச் சேர்ந்த 20 நாய்களை இந்தியாவிடமிருந்து பெற்றுள்ளது.
ஜூன் மாதம் வந்திறங்கிய அந்த 20 மோப்ப நாய்களும் அவற்றை கையாளுபவர்களும், சுங்கத் துறையின் K9 மோப்ப நாய்கள் பிரிவில் உரிய பயிற்சிகளை முடித்துக் கொண்டிருப்பதாக JKDM துணைத் தலைமை இயக்குநர் ரீபுவான் அப்துல்லா (Ribuan Abdullah) தெரிவித்தார்.
இதையடுத்து, நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளிடம் அவை ஒப்படைக்கப்படும்.
போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதில் அமுலாக்கத் துறையினருக்கு அவை உதவுமென்றார் அவர்.
என்னதான் அதிநவீன scanning சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தினாலும், போதைப்பொருள் மோப்ப நாய்களிடமிருக்கும் மோப்ப ஆற்றல் அபாரமானது.
அதோடு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் மோப்ப நாய்களின் வருகை ஒரு வித கிலியை ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.