
பாசீர் மாஸ் , பிப் 17 – Pengkalan Chepa பொது நடவடிக்கை படையின் அதிகாரிகள் , ஞாயிற்றுக்கிழமை செரோங்கா ( Serongga ) சோதனைச் சாவடி வழியாக நான்கு சட்டவிரோத குடியேறிகளை காரில் ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆடவனைக் கைது செய்ததைத் தொடர்ந்து ஆள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதில் வெற்றி பெற்றனர்.
40 வயதுடைய அந்த சந்தேகக் பேர்வழி காரை ஓட்டிச் சென்றதைக் பொது நடவடிக்கை குழுவின் 8 ஆவது பட்டாள பிரிவினர் கண்டறிந்ததைத் தொடர்ந்து குடிநுழைவு 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 55E இன் கீழ் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் .
அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகளும் 1959/63 குடிநுழைவு சட்டத்தின் பிரிவு 6(1)(c) யின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் மேல் நடவடிக்கைக்காக பாசிர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொது நடவடிக்கைப் படையின் தென்கிழக்கு பிரிவின் கமாண்டர், டத்தோ நிக் ரோஸ் அசான் நிக் அப்துல் ஹமிட்( Nik Ros Azhan Nik Ab Hamid) தெரிவித்தார்.
வாகனத்தில் இருந்த அனைத்து நபர்களும் சரியான அடையாள ஆவணங்களைக் காட்டத் தவறியதும் கண்டறியப்பட்டது. சட்டவிரோத குடியேறிகளுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதற்காக அந்த வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டான் .