
குவா மூசாங், டிச 3 – குவா மூசாங் – லோஜிங் சாலையின் 45 ஆவது கிலோமீட்டரில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சத்ரியா Neo கார் பள்ளத்தில் விழுந்ததில் அதிர்ஸ்டவசமான உயிர்தப்பினார்.
பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர் கேமரன் மலையிலிருந்து பாசிர் பூத்தேவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று விடியற்காலை 5 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden சிக் சூன் பூ ( Sik Choon Foo ) தெரிவித்தார்.
நிலச்சரிவுக்கு உள்ளான சாலை மூடப்பட்டிருந்த நிலையில் இருந்ததால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இடது கையில் காயத்திற்கு உள்ளான அந்த இளைஞர் Pos Brooke சுகாதார கிளினிக்கில் சிகிக்சை பெற கொண்டுச் செல்லப்பட்டார், இதனிடையே விபத்துக்களை தவிர்ப்பதற்காக பொதுப் பணித்துறையினால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சாலைகளில் பயணம் செய்ய வேண்டாமென பொதுமக்களை Choon Foo கேட்டுக்கொண்டார்.



