
கேரளா, நவம்பர் 24 – நேற்றிரவு மட்டுமே சபரிமலையில், 7 மணி பூஜையின்போது 69,295 பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
அதே சமயத்தில் இம்மாதம் நவம்பர் 16-ஆம் தேதி முதல் சபரிமலையில் விசேஷ தரிசனத்தை முன்னிட்டு சுமார் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றுக்கூடியிருக்கின்றனர்.
வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சபரிமலையில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு போதிய வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சபரிமலை மண்டல பூஜை காலம் முழுவதும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வருபவர்கள் ஆன்லைன் பதிவு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணத்தை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



