
அபுஜா, நவம்பர்-23 – ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் குறைந்தது 315 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயுத கும்பலால் கடத்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜர் (Niger) மாநிலத்தில் உள்ள செயின்ட் மேரி கத்தோலிக்க பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சில நாட்களுக்கு முன் கெபி (Kebbi) மாநிலத்தில் 25 மாணவிகள் கடத்தப்பட்டது, மேற்கு நைஜீரியாவில் தேவாலயத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தது போன்ற சம்பவங்கள் ஏற்படுத்திய பரபரப்பே அடங்காத நிலையில், இக்கடத்தலை அக்கும்பல் அரங்கேற்றியுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பல மாநில அரசுகள் பள்ளிகளை உடனடியாக மூடியுள்ளன.
இந்த அசாதாரண நிகழ்வால், நைஜீரிய அதிபர் Bola Tinubu தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்பதை இரத்து செய்து விட்டு, இந்த நெருக்கடியை சமாளித்து வருகிறார்.
இந்த சம்பவம், 10 ஆண்டுகளுக்கு முன் Chibok பகுதியில் Boko Haram போராளி கும்பல் நூற்றுக்கணக்கான மாணவிகளை கடத்தியச் சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது.
கடத்தல்கள் தொடர்ந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக திரும்புவதைக் காணக் காத்திருக்கின்றன.



