Latestமலேசியா

பட்டவொர்த் நிலையத்தில் தடம்புரண்ட KTM Komuter காலி இரயில்

பட்டவொர்த், நவம்பர்-9,

பினாங்கு, பட்டர்வொர்த் KTM நிலையத்தின் 4-ஆவது platform நடைமேடையில் நேற்று அதிகாலை, தண்டவாளத்தின் முடிவில், கம்யூட்டர் இரயில் தடம் புரண்ட சம்பவத்தை KTMB நிறுவனம் உறுதிப்படுத்தியது.

காலை 6 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், இரயில் அதன் தினசரி அட்டவணையின்படி இயங்கிக் கொண்டிருந்ததாகவும், ​​எனினும் 6 பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லை என்றும்
KTMB கூறியது.

சம்பவம் நிகழ்ந்த உடனேயே KTMB தொழில்நுட்பக் குழு சம்பவ இடம் விரைந்து, அப்பகுதியின் பாதுகாப்பையும், நிலையத்தின் சுமூகமான செயல்பாடுகளையும் உறுதிச் செய்வதற்காக பெட்டிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டது.

இரயில் தடம் புரண்டதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செயல்பாடு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இரயில் சேவைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதை உறுதிச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் KTMB உறுதியளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!