Latestமலேசியா

பண்டார் பாரு உடாவில் இரு சிறுமிகளுக்கு முன்பாக நிர்வாணமாக காட்சியளித்த ஆடவர் கைது

ஜோகூர் பாரு, ஏப் 2 – பண்டார் பாரு உடாவில், நேற்று தனது காரில் அமர்ந்திருந்தபோது 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு முன்பாக நிர்வாணமாகக் காட்சியளித்ததாகக் கூறப்படும் 54 வயது மதிக்கத்தக்க நபரை ஜோகூர் போலீசார் கைது செய்தனர்.

மதியம் 1 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கருவியில் காணப்பட்ட பதிவில் Padi Mahsuri 10 சாலையில் இரண்டு சிறுமிகள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​ஒரு கருப்பு நிற கார் இயங்காமல் நின்றுகொண்டிருந்தது பதிவாகியுள்ளது.

சில வினாடிகளுக்குப் பிறகு, ஓட்டுநர் அந்தச் சிறுமிகளை அழைத்தார். அவர்களில் ஒருவர் வாகனத்தை நெருங்கியதும், இருவரும் ஓடிச் செல்வது காணப்பட்டது. பின்னர் ஓட்டுநர் காரைப் பின்னோக்கி எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சிறுமிகளில் ஒருவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், சந்தேக நபர் இரவு 11 மணிக்கு மசாயில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கருப்பு நிற Honda Accord காரில் வந்த ஒரு நபர், தனது மகளையும் உறவுக்கார பெண் ஒருவரையும் அணுகியதாக 33 வயதான ஒருவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்வதற்கு முன்பு, அந்தச் சந்தேக நபர் கழிப்பறைக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளார் என வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ராடின் ராம்லான் ராடின் தஹா (Radin Ramlan Radin Taha ) தெரிவித்தார்.

2017 ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் 15(a)(i)-இன் பிரிவின் கீழ் அநாகரிகமாக உடலைக் காட்டியது உட்பட உடல்ரீதியற்ற பாலியல் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வசதியாக, சந்தேக நபர் இன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!